உள்நாடு

இன்றும் சில கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன

(UTV | கொழும்பு) – முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு மற்றும் முள்ளியவளை ஆகிய 3 காவல்துறை அதிகார பிரிவுகள், நேற்றிரவு 11 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சிலவா அறிவித்துள்ளார்.

அதேநேரம், இன்று (18) காலை மேலும் இரண்டு மாவட்டங்களின் 3 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டதாக இராணுவத் தளபதி அறிவித்துள்ளார்.

இதன்படி கம்பஹா மாவட்டத்தின் கப்புகொட செபஸ்டியன் வீதியில் இருந்து தெபடிய வீதி வரையான பகுதியும், பிட்டிபன – லெல்லம பகுதியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் ஹம்பாந்தொட்டை மாவட்டத்தின் ரொட்டே கிராமசேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

Related posts

குழந்தைகளுக்கு, திரிபோஷா வழங்குவது தொடர்பில் சிக்கல் !

சீன பிரதமர் லீ கெக்யோங் இலங்கைக்கு

இலங்கையில் நியாயமான தேர்தலை நடாத்துவதற்கு எப்போதும் ஆதரவு – மத்தியூ மில்லர்.