உள்நாடு

இன்றும் எரிபொருள் வரிசையில் நின்ற ஒருவர் பலி

(UTV | கொழும்பு) – மற்றுமொரு நபர் ஒருவர் இன்று(21) மீரிகமவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்த போது தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 76 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் (20) கடவத்தையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் நின்ற 70 வயதுடைய நபர் ஒருவர் சுருண்டு விழுந்து உயிரிழந்துள்ளார்.

நேற்று முன் தினம் (19) கண்டியில் எரிபொருள் வரிசையில் மண்ணெண்ணெய் பெற வரிசையில் காத்திருந்த நபரும் தவறி விழுந்து உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்று இரவு 9 மணிக்கு ஜனாதிபதியின் விஷேட உரை

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பிரபல யூடியூபர் அஷேன் சேனாரத்ன

editor

இன்றைய தினமும் அதிக வெப்பமான காலநிலை