உள்நாடு

இன்று முதல் விசேட டெங்கு ஒழிப்பு வாரம் – சுகாதார அமைச்சு

(UTV | கொழும்பு) –

நாட்டில் டெங்கு நோய் பரவி வரும் சூழலில் இன்று ஞாயிற்றுக்கிழமை (7) தொடங்கி விசேட டெங்கு ஒழிப்பு வாரத்தை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் சமூக சுகாதார நிபுணர் வைத்தியர் அனோஜா தீரசிங்க அறிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் 70 சுகாதார வைத்திய பிரிவுகளை உள்ளடக்கி டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது என அனோஜா தீரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

நாட்டில் டெங்கு பரவுவதற்கான சூழல் காரணிகளை நீக்குவதற்கான விசேட வேலைத்திட்டங்கள் தொடர்பில் இன்றைய தினம் பொது மக்களுக்கு அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இன்றும் 209 பேர் குணமடைந்தனர்

ஐ.தே.க வின் செயற்குழு கூட்டம் இன்று

ஜனாதிபதி அநுரவுக்கு பூரண ஆதரவை வழங்க தயார் – IMF

editor