சூடான செய்திகள் 1

இன்று முதல் மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுப்புமாறு பாதுகாப்பு தரப்பினர் கோரிக்கை

(UTV|COLOMBO) பாதுகாப்பு தொடர்பில் சிக்கல்களை ஏற்படுத்தி கொள்ளாது இன்று முதல் மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுப்புமாறு பாதுகாப்பு தரப்பினர் பெற்றோர்களிடம் கோரியுள்ளனர்.

இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரால் மகேஸ் சேனாநாயக்க இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

பாதுகாப்பு குறித்து எந்தவித அச்சத்தையும் ஏற்படுத்தி கொள்ள வேண்டாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலைகளுக்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அச்சமின்றி சகல மாணவர்களையும் பாடசாலைகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

 

 

Related posts

கல்முனையில் உடன் ஊரடங்கு சட்டம் அமுலில்

இந்திய பிரஜை ஒருவர் கைது

மக்களின் ஆணைக்கமைய அரசாங்கம் செயற்பட வேண்டும்-பிரதமர் ரணில்