உள்நாடு

இன்று முதல் நான்கு நாட்களுக்கு விசேட சுற்றிவளைப்பு

(UTV | கொழும்பு) – மோட்டார் சைக்கிள் விபத்துகளை குறைப்பதற்கு இன்று(31) முதல் நான்கு நாட்களுக்கு விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதன்போது, மோட்டார் சைக்கிள் சோதனை தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்படும் என, பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களால் மேற்கொள்ளப்படும் வீதி ஒழுங்கு விதிமுறைகள் மீறப்படுகின்றமை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் விசேட அவதான செலுத்தப்படவுள்ளது.

இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் வாகன விபத்துகள் காரணமாக 8 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.

 

Related posts

ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு அழைப்பு

சாய்ந்தமருது பிரதேச உணவகங்களில் சுகாதாரம் பேணப்படவில்லையா ? சுகாதார பிரச்சினைகளா ? சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தை அழையுங்கள்

editor

திருகோணமலை மாவட்டத்தில் EMS தபால் விற்பனை ஊக்குவிப்பு திட்டம்

editor