சூடான செய்திகள் 1

இன்று முதல் கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்

(UTVNEWS|COLOMBO) – பொஹ்ரா மாநாட்டை முன்னிட்டு கொள்ளுப்பிட்டி மற்றும் தெஹிவளை வீதி உள்ளிட்ட கிளை வீதிகளில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இன்று(30) காலை 7 மணிமுதல் 9 மணிவரையிலும், பிற்பகல் 4 மணி முதல் 6 மணிவரையிலும் குறித்த விசேட போக்குவரத்து திட்டமானது நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

எதிர்வரும் 10ம் திகதி வரையில் இந்த விசேட போக்குவரத்து நடைமுறை அமுலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

10 இலட்சம் பலா மரக்கன்றுகளை நடும் திட்டம் இன்று ஆரம்பம்

இலங்கையில் மேலும் மூவருக்கு கொரோனா

அரபு நாடுகளின் அவசர கூட்டத்திற்கு சவுதி அரேபியா அழைப்பு!