சூடான செய்திகள் 1

இன்று முதல் ஐந்தே நிமிடங்களில் பிறப்பு இறப்பு சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளும் வசதி

(UTV|COLOMBO)-நாட்டின் எந்தப் பகுதியில் வாழும் பிரஜைகளும் பிறப்பு, திருமண மற்றும் மரண சான்றிதழ்களை இன்று(17) முதல் ஐந்து நிமிட சேவையில் பெற்றுக்கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்தரமுல்லையில் உள்ள பதிவாளர் நாயகம் அலுவலகம் இன்று(17) முதல் இந்த நாட்டின் எந்தப் பகுதியில் வாழும் பிரஜைகளுக்கு சான்றிதழ்களை விநியோகிக்க ஏற்பாடுகளை செய்துள்ளது.

இதேவேளை, 1960 தொடக்கம் 2015ம் ஆண்டு வரை உள்ள காலப்பகுதிக்கான சான்றிதழ்களை ஐந்து நிமிடங்களில் பெற்றுக்கொள்ள முடியும் என்று உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், தற்போது நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள 332 பிரதேச செயலகங்களில் 183 செயலகங்கள் இந்த சான்றிதழ்களை விநியோகித்து வருகின்றன என தெரிவிக்கப்படுகிறது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரும் கைது–பிரதமர்

எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் மோசடி

மற்றுமொரு அமைச்சர் பதவிப்பிரமாணம்