உள்நாடு

இன்று முதல் இ.போ.ச டிப்போக்கள் ஊடாக தனியார் பேரூந்துகளுக்கு எரிபொருள்

(UTV | கொழும்பு) – இலங்கை போக்குவரத்து சபையின் 45 டிப்போக்கள் ஊடாக தனியார் பேருந்துகளுக்கு எரிபொருள் விநியோகம் செய்யும் நடவடிக்கை இன்று காலை ஆரம்பிக்கப்பட்டதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இதன்படி, ஒரு மாகாணத்திற்கு மட்டுப்படுத்தப்பட்ட பஸ்களுக்கு 100 லீற்றரும், மாகாணங்களுக்கு இடையிலான பஸ்களுக்கு 150 லீற்றரும் எரிபொருள் வழங்கப்படவுள்ளது.

கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போக்குவரத்து அமைச்சர், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இலங்கை புகையிரத மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு எரிபொருளை வழங்கி வருவதாக தெரிவித்தார்.

இதன் காரணமாக பஸ் சாரதிகள் வரிசையில் நிற்காமல் எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சர் உறுதியளித்தார்.

சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகளுக்கு சுற்றுலா அமைச்சகம் சிறப்பு ஸ்டிக்கர் ஒன்றையும் வெளியிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அத்தகைய பேருந்துகள் தங்களுடைய இடத்திலுள்ள டிப்போவில் இருந்து எரிபொருளை நிரப்பிக் கொள்ளலாம்.

எதிர்வரும் நாட்களில் அனைத்து பஸ்களுக்கும் இலங்கை போக்குவரத்து சபை டிப்போக்கள் ஊடாக எரிபொருள் வழங்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.

Related posts

தபால்மூல வாக்களிப்பு – விண்ணப்பிக்கும் காலம் நீடிப்பு

எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 63 சதவீத வாக்குப்பதிவு

editor

திடீரென தீப்பிடித்து எரிந்த மோட்டார் சைக்கிள்

editor