உள்நாடு

இன்று மீளவும் பாராளுமன்ற அமர்வு

(UTV | கொழும்பு) –   பாராளுமன்ற அமர்வு இன்று (23) மீண்டும் இடம்பெறுகின்றது.

சுங்க கட்டளை சட்டத்தின் 10 ஆவது சரத்துக்கு உட்பட்ட இறக்குமதி சுங்க வரி தொடர்பிலான பரிந்துரைகள் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சட்டத்தின் கீழ் நிதியமைச்சரினால் விதிக்கப்பட்டுள்ள 2 ஒழுங்கு விதிகள் மற்றும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் கீழான கட்டளைகள் இன்று (23) விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.

மாலை 4.30 தொடக்கம் 5.30 வரையில் ஆளும் தரப்பினால் முன்வைக்கப்படவுள்ள சபை ஒத்திவைப்பு பிரேரணை விவாதமும் இடம்பெறவுள்ளது.

இதேவேளை கடந்த 10 ஆம் திகதி ஆரம்பமான உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி திங்களன்று நியூயோர்க் விஜயம்

தந்தையும் மகனும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில்

ஊடகப் பொறுப்பை ஊடகத்துறை அமைச்சர் விளக்குகிறார்