சூடான செய்திகள் 1

இன்று மீண்டும் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு கூடுகிறது

(UTV|COLOMBO)  இன்று (13ஆம் திகதி) உயிர்த்த ஞாயிறு  தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு  பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் கூடவுள்ளது.

கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் M.L.A.M. ஹிஸ்புல்லா மற்றும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் N.K. இலங்ககோன் ஆகியோர் இன்று பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களைத் தவிர,பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஆகியோரும் இன்று தெரிவுக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

 

Related posts

ஜனாதிபதி தேர்தல் – ஆதரவுக் கணிப்பில் சஜித் பிரேமதாச முன்னணியில்

UPDATE-ரயில்வே எஞ்சின் சாரதிகளின் தொழிற்சங்கப் போராட்டம் இடைநிறுத்தம்

கொழும்பு மகளிர் பாடசாலைகளை மையப்படுத்தி போதை பொருள் விற்பனை