உள்நாடு

இன்று மின்வெட்டு தொடர்பிலான முழு விபரம்

(UTV | கொழும்பு) – இன்று ஐந்து மணித்தியாலங்களுக்கு அதிகமான சுழற்சி முறையிலான மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருள் பற்றாக்குறை காரணமாக இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, இன்று A,B,C பகுதிகளில் 4 மணி நேரம் 40 நிமிடங்களுக்கு மின் வெட்டு அமுல் படுத்தப்பட உள்ளது.

காலை 8.30 முதல் 2 மணி நேரம் 40 நிமிடங்களும் மற்றும் மாலை 4.30 மணி முதல் இரவு 10.30 மணி வரையான காலப்பகுதியில் 2 மணி நேர மின்வெட்டும் அமுல்படுத்தப்பட உள்ளது.
இதுவேளை P,Q,R,S,T,U,V,W ஆகிய பகுதிகளுக்கு 5 மணி நேரம் 15 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளது.

குறித்த பகுதிகளில் காலை 8.30 முதல் 2 மணி நேரம் 45 நிமிடங்களும் மற்றும் மாலை 4.45 முதல் இரவு 9.45 வரை 2 மணி நேரமும் இவ்வாறு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

அரசின் ஊழல்களை கட்டவிழ்த்தார் அநுர

உள்நாட்டு பால்மா விலை அதிகரிப்பு

இன்றும் சுகாதார பணிப்புறக்கணிப்பு!