உள்நாடு

இன்று மின்வெட்டு இல்லை

(UTV | கொழும்பு) – நாடளாவிய ரீதியாக இன்றைய தினமும் மின்சாரம் துண்டிக்கப்படமாட்டாது என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

கனியவள கூட்டுதாபனத்திடம் இருந்து நேற்று(15) கிடைக்கப்பெற்ற 3,000 மெற்றிக் டொன் டீசல் தொடர்ந்து போதுமானதாக உள்ளமையினால் மின்சாரத்தை துண்டிக்க வேண்டிய அவசியம் ஏற்படமாட்டாது இலங்கை மின்சார சபையின் மேலதிக பொது முகாமையாளரும் பேச்சாளருமான எண்ட்ரூ நவமணி தெரிவித்துள்ளார்.

அத்துடன் அதிகளவான மின்சார தேவை ஏற்படாவிடத்து எதிர்வரும் செவ்வாய் கிழமைவரை குறித்த எரிபொருள் போதுமானதான இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் நாட்களில் மின்சார சபைக்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்வது தொடர்பான கலந்துரையாடல் ஒன்றும் எதிர்வரும் செவ்வாய் கிழமை இடம்பெறவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் மேலதிக பொது முகாமையாளரும் பேச்சாளருமான எண்ட்ரூ நவமணி தெரிவித்துள்ளார்.

Related posts

இடிந்து விழுந்த சுவர் – பாடசாலை மாணவி மரணம்

பிரதமர் தலைமையில் 21வது அரசியலமைப்பு திருத்த சட்டமூல கலந்துரையாடல்

இன்று 5 மணி நேர மின்வெட்டு