உள்நாடு

இன்று மின் வெட்டு இடம்பெறாது

(UTV | கொழும்பு) – இன்று(15) மின் வெட்டு இடம்பெறாது என மின்சக்தி அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கனியவள கூட்டுத்தாபனத்திடமிருந்து மின்சார சபைக்கு 3,000 மெற்றிக் டன் டீசல் கிடைத்துள்ளமையால் மின் வெட்டு இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் காலங்களில் நாட்டில் 24 மணிநேர மின்வெட்டு ஏற்படக் கூடும் என்று இலங்கை மின்சார சபை ஊழியர் சங்கம் நேற்று எச்சரிக்கை விடுத்திருந்தது.

எதிர்வரும் நாட்களில் மின் தட்டுப்பாடு காரணமாக நாட்டின் செயற்பாடுகள் ஸ்தம்பிக்கக் கூடும் என்று, சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts

அதிகரிக்கப்படும் அதிபர்களுக்கான கொடுப்பனவு!

தொடர்ந்தும் 6 மாவட்டங்களுக்கு ஊரடங்கு சட்டம் நீடிப்பு

பாம்பு தீண்டி பெண் தோட்டத் தொழிலாளி பலி!