உள்நாடு

இன்று மின் கட்டணம் குறையுமா ?

இந்த ஆண்டுக்கான இரண்டாவது மின் கட்டண திருத்தம் இன்று அறிவிக்கப்படவுள்ளதாக பொது பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கட்டண திருத்தம் தொடர்பான மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் புதிய கட்டண திருத்தம் அறிவிக்கப்படும்.

மின் கட்டண குறைப்பு தொடர்பிலான பரிந்துரைகள் அண்மையில் மின்சார சபையினால் பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, 30 புள்ளிகளுக்கு இடைப்பட்ட மின்சார அலகு ஒன்றின் விலை 2 ரூபாவாலும்,

30 முதல் 60 புள்ளிகளுக்கு இடைப்பட்ட அலகு ஒன்றின் விலை 11 ரூபாவாலும்,

60 முதல் 90 புள்ளிகளுக்கு இடைப்பட்ட அலகு ஒன்றின் விலை 12 ரூபாவாலும் குறைப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 90 ரூபா முதல் 120 ரூபா வரையிலான அலகு ஒன்றின் விலையை 20 ரூபாவினால் குறைக்க மின்சார சபை முன்மொழிந்துள்ளது.

Related posts

நாளாந்த மின் உற்பத்திக்காக 3,500 மெட்ரிக் டன் டீசல்

பல்கலைக்கழகங்களை மீள திறப்பது குறித்து தீர்மானம்

காய்கறிகளின் விலைகளில் அதிகரிப்பு