கேளிக்கை

இன்று மாலை ‘தளபதி 63’ படத்தின் அப்டேட்

(UTV|INDIA) ‘தெறி’, ‘மெர்சல்’ படங்களுக்கு பிறகு விஜய் – அட்லி கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் ‘தளபதி 63’. இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
சில நாட்களாக இப்படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனாவிடம் ரசிகர்கள் தளபதி 63 படத்தின் அப்டேட் சொல்லுங்கள் என்று கேட்டு வந்தனர். அவரும் நேரம் வரும் பொழுது அப்டேட் வெளியிடப்படும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் இன்று ‘தளபதி 63’ படத்தின் அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என்று கூறியிருக்கிறார். இது விஜய் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

 

Related posts

வில்லன் வேடத்தில் நடிக்க மறுத்த மாதவன்

38 வயதில் திருமணத்துக்கு தயாராகும் கவுசல்யா

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகை