உள்நாடு

இன்று மழையுடன் கூடிய காலநிலை

(UTV | கொழும்பு) – ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் இன்று பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப் படுகின்றார்கள்.

காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

Related posts

அரிசி இறக்குமதி அனுமதி நாளையுடன் நிறைவு – மீண்டும் நீட்டிக்கப்படுமா ? இல்லையா ?

editor

புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் இறுதி தீர்மானம்

editor

ஒத்திகை தேர்தல்களின் அனுகூலங்கள் தொடர்பில் ஞாயிறன்று கலந்துரையாடல்