உள்நாடு

இன்று நள்ளிரவு முதல் எரிவாயு விலை குறைவு

(UTV | கொழும்பு) –  12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 1,050 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது.

இன்று(17) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் உள்நாட்டு LPG எரிவாயுவின் விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 12.5 கிலோ கிராம் எடையுள்ள Laugh Gas சிலிண்டரின் விலை 1,050 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 5,800 ரூபாவாகும்.

மேலும், 5 கிலோ எடை கொண்ட எல்பிஜி சிலிண்டரின் விலை 420 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 2320 ரூபாவாகும்.

இதேவேளை, 2 கிலோகிராம் எல்பிஜி சிலிண்டரின் புதிய விலை 928 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related posts

கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

ஜனாதிபதி செயலாளராக காமினி செனரத்

நீதவான் சரவணராஜா விவகாரம் – BASL கண்டனம்.