உள்நாடு

இன்று திறக்கப்பட்ட பாடசாலைகளுக்கு ஏப்ரல் 9 ஆம் திகதி முதல் விடுமுறை

(UTV | கொழும்பு) – மேல் மாகாண பாடசாலைகளில் தரம் 05, 11,13 ஆம் தரங்களை தவிர்ந்த ஏனைய தர வகுப்பு கல்வி நடவடிக்கைகள் ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவிருக்கின்றன.

இதற்கமைவாக தரம் 1 தொடக்கம் தரம் 4 வரையிலும் தரம் 06 தொடக்கம் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் அன்றைய தினம் ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்தார்.

இன்று திறக்கப்படும் பாடசாலைகள் யாவும் சித்திரைப்புத்தாண்டு விடுமுறைக்காக ஏப்ரல் மாதம் 9ஆம் திகதி மூடப்படவிருப்பதாக கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில சி பெரேரா அறிவித்துள்ளார்.

Related posts

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 660ஆக அதிகரிப்பு

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் நாளை முதல் திறப்பு

ரணில் தலைமைகளில் இருந்து விலகுகிறார்