சூடான செய்திகள் 1

இன்று ஜனாதிபதி-ஐ.ம.சு கூட்டமைப்பினருக்கும் இடையில் சந்திப்பு

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினருக்கும் இடையில் இன்றைய தினம் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
இன்று மாலை இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக அரசியல் தரப்பு தகல்கள் தெரிவிக்கின்றன.
இதன்போது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மேற்கொண்ட தீர்மானங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், பாராளுமன்ற  உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷவின் தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவர்கள் நாளை கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளனர்.
இதன்போது, எதிர்க்கட்சித் தலைவர் தொடர்பிலும் பாராளுமன்றத்தில்  செயற்படும் விதம் குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

விடுதலையான மாணவர்கள் அமைச்சர் ரிஷாதை சந்தித்தனர்!

நானாட்டான் பூவரசன் கண்டல் குள புனரமைப்பு பணிகள் ஆரம்பம்.

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்த மேலும் 5 பேர் பூரண குணம்