சூடான செய்திகள் 1

இன்று இரவு இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்

(UTV|COLOMBO) – நாட்டின் பல பிரதேசங்களில் இன்று(14) இரவு 10.00 மணி வரையில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அதனடிப்படையில் மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் மாலை வேலைகளில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 100 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

எதிர்க்கட்சித் தலைவரின் வேண்டுகோள்

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 811 ஆக அதிகரிப்பு

பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் அலுவலகத்தில் சோதனை