சூடான செய்திகள் 1

இன்று 24 மணி நேர நீர் வெட்டு

(UTV|COLOMBO) கொழும்பை அண்மித்த சில பிரதேசங்களுக்கு இன்று  காலை 09.00 மணிமுதல் நாளை காலை 09.00 மணி வரை 24 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் விநியோக சபை கூறியுள்ளது.

இதன்படி மகரகம, பொரலஸ்கமுவ, கொட்டாவ, பன்னிபிட்டிய, ருக்மல்கம, பெலவத்தை, மத்தேகொட, ஹோமாகம, பாதுக்க மற்றும் மீபே ஆகிய பிரதேசங்களில் இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளது.

கொழும்பு மாவட்டத்தின் கிழக்கு நகர நீர் வழங்கல் வேலைத் திட்டத்தின் கீழ் நீர் குழாய் கட்டமைப்பில் மேற்கொள்ளப்பட உள்ள அத்தியவசிய திருத்தப் பணிகள் காரணமாகவே நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் விநியோக சபை கூறியுள்ளது.

Related posts

இலங்கையின் மேல் மாகாணத்தில் தொழு நோயாளிகள் அதிகரிப்பு!

பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் தனது சொந்த நிதியிலிருந்து ஜனாஸா நலன்புரிச்சங்கங்களுக்கு நீர்த்தாங்கிகளை வழங்கி வைத்தார்.

கொழும்பு-ஜம்பட்டா வீதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி