கிசு கிசு

இனியாவது முஸ்லிம் சடலங்களை ஓட்டமாவடிக்கு அனுப்புவதை நிறுத்துங்கள்

(UTV | கொழும்பு) –  நீரினால் கொரோனா பரவாது என்பது விஞ்ஞானபூர்வமாக நீரூபணமாகியுள்ளதால் இனியாவது கொரோனாவினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் சடலங்களை ஓட்டமாவடிக்கு அனுப்வதை நிறுத்துமாறு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற 2022 வரவு – செலவு திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

தனது கன்னி வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்துள்ளது தொடர்பில் நிதி அமைச்சருக்கு எமது பாராட்டை தெரிவிக்கிறோம். பொருள் விலை உயர்வுக்கு நிரந்தர தீர்வு காண எந்த அரசாங்கத்தினாலும் முடியவில்லை.

வர்த்தமானி அறிவிப்புகள் தொடர்பில் விமர்சனம் வந்தது. விஞ்ஞானபூர்வமாக ஆராய்ந்து செயற்பட்டதால் தாக்கம் ஏற்பட்டதாக நிதி அமைச்சர் நேர்மையாக ஏற்றுக் கொண்டிருப்பது வரவேற்கத்தக்கது.

Related posts

மஹிந்த தேஷப்பிரியவின் வீட்டில் திருட்டு

வெளிநாட்டில் இருந்து சிகரட் இறக்குமதி செய்ய அனுமதிக்கப் போவதில்லை

மஹிந்தவின் குடும்பத்தையே கொலை செய்ய சதி?