அரசியல்உள்நாடு

இன மத பேதங்களுக்கு அப்பால்   மக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன் – ரிஸ்லி முஸ்தபா

இன மத பேதங்களுக்கு அப்பால் எனது தந்தை, பாட்டனார் போல  மக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன் என்று ரிஸ்லி முஸ்தபா தெரிவித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட இளைஞர்களின் மாபெரும் எழுச்சி மாநாடு “புதிய யுகம் நோக்கிய பயணம்” எனும் தொனிப் பொருளில் சாய்ந்தமருது பௌசி மைதானத்தில்  சனிக்கிழமை (24) இடம் பெற்றபோது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட இளைஞர் அமைப்பாளரும் மயோன் கல்வித் திட்ட, சமூக அமைப்பின் தலைவருமான றிஸ்லி முஸ்தபா மேற்கண்டவாறு உரையாற்றினார்.

இன்றைய கட்சியின் அதிவு ஏற்பட உறுப்பினர்கள் மற்றும் அம்பாறை மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் என பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் யுவதிகளும் கலந்து கொண்டனர்.

இங்கு அவர் மேலும் தனதுரையில் குறிப்பிடும்போது,

எனது தந்தை மர்ஹூம் மாயோன்  முஸ்தபாவின் திட்டங்களில் ஒன்றான அம்பாரை மாவட்டத்தின் அபிவிருத்தி மற்றும் மாவட்ட இளையோருக்கான வேலைவாய்ப்பு,அம்பாறை மாவட்ட இளைஞர்களுக்கான நவீன வசிதிகள் கொண்ட தொழினுட்ப கல்லூரி, நவீன வசதிகள் கொண்ட விளையாட்டு மைதானம் மேலும் பல இளையோருக்கான தேவைப்பாடுகள் மக்கள் நலன் சார் இதர சேவைகள் என்பன இன்ஸா அல்லாஹ் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரிசாட் பதியுதீ தீனின் உதவியுடன் மேற்கொள்வேன். 

அம்பாரை மாவட்டத்தில்  என்னை பல கட்சிகள் அழைத்தது. ஆனால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கொள்கை சரியான பாதையை முன்னெடுக்கும் என்ற நம்பிக்கை என்னிடம் உண்டு. 

அதனால்தான் நான் ஏ.சி.எம்.சி கட்சியில் இணைந்து பயணித்து சேவையாற்ற உள்ளேன்.

இதற்காக இளைஞர்கள் என்னோடு ஒன்று சேர்ந்து பயணிக்க முன்வர வேண்டும். அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களில் இருந்தும் எமது அரசியல் பயணத்தில் இணைந்து கொள்வதற்காக வந்திருக்கின்ற இளைஞர்களை பார்க்கும்போது மிகவும் சந்தோஷம் அடைகின்றேன்.

இது என் மீதும் எமது கட்சியின் தலைமை மீதும் கொண்டுள்ள அன்பின் வெளிப்பாடு என்று நான் நம்புகின்றேன். அது போன்று எனது எதிர்கால அரசியல் பயணத்தில் இளைஞர்களுக்கான சிறந்த எதிர்காலத்தை பெற்றுக்கொடுக்க நான் முன் நின்று உழைப்பேன்.

எனவே, நாம் இளைஞர்கள் ஒன்றிணைந்து  கட்சித் தலைமையின் கைகளை பலப்படுத்துவதோடு,  எமது உரிமைகளை,  தேவைகளை பெற்றுக் கொள்வதுடன் சிறந்த

அரசியல் கலாச்சாரத்தை உருவாக்குவதற்காக இன மத பேதமின்றி நாம் ஒன்றிணைவோம்  என்றும் கூறினார்.

-எஸ்.அஷ்ரப்கான்,எம்.என்.எம்.அப்றாஸ்

Related posts

மற்றுமொரு கிராம சேவகர் பிரிவு முடக்கம்

இன்று தடுப்பூசி செலுத்தும் இடங்கள்

இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் அமுல்படுத்துவது தொடர்பில் அறிவிப்பு