கிசு கிசு

இந்தோனேசியாவில் மலர்துள்ள பிணமலர்.

(UTV|INDONESIA)- இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா தீவில் 4 அடி அகலத்திற்கு பிரமாண்ட தோற்றத்தில் ரப்லேசியா அர்னால்டி என்ற பூ மலர்ந்துள்ளது.

உலகில் இதுவரை பூத்த மலர்களில் இதுவே மிகப்பெரியது என்று தாவரவியல் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்

ரப்லேசியா அர்னால்டி பூக்கும் செடிகள் ஒட்டுண்ணி தாவர வகையை சேர்ந்தவை ஆகும். இந்த செடிகளுக்கு வேர்கள் இலைகள் எதுவும் கிடையாது. மற்றொரு தாவரத்தில் வளரும் இந்த செடிகளில் மலர்கள் மலர்ந்து வெளியே வரும் போது தான், அவை மற்றொரு தாவரத்தில் ஒட்டுண்ணியாக இருப்பதே தெரியவரும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ரப்லேசியா அர்னால்டி உருவத்தில் பெரிதாக இருந்தாலும், அந்த பூவில் இருந்து அழுகிய இறைச்சியின் துர்நாற்றம் வீசும். எனவே இந்த மலர் பிணமலர் என்றும் அழைக்கப்படுகிறது.

அதேபோல் உலகிலேயே மிகப்பெரிய பூ என்ற பெருமையை கொண்டிருந்தாலும் இந்த பூவின் ஆயுட்காலம் ஒருவாரம்தான் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஒரே பிரசவத்தில் பிறந்த 7 குழந்தைகள்..!

இறந்த பெண்ணின் கர்ப்பப்பையில் பிறந்த உலகின் முதல் குழந்தை!

காலிக்கு எதிர்வரும் சில மணி நேரங்கள் தீர்மானமிக்கது