உலகம்

இந்தியாவில் முதல் முறையாக ஒரே நாளில் 2,000க்கும் அதிகமானோர் பலி

(UTV | இந்தியா) – இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது இதுவரையில் 354,161 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை மாநிலங்கள் புதுப்பித்ததை தொடர்ந்து, அந்நாட்டில் முதல் முறையாக ஒரே நாளில் 2,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளது தெரிய வந்துள்ளது.

இதைத் தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 11,921 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் உயிரிழப்புகள் வரிசையில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஈரானுக்கு எதிராக பொருளாதார தடை – ட்ரம்ப்

பாகிஸ்தானில் மற்றுமொரு கொடூரம் – இம்ரான் உத்தரவு

பிரதமரின் உயரத்தை கிண்டலடித்த பத்திரிகையாளர் – 5,000 யூரோக்கள் அபராதம்.