உள்நாடு

இந்தியாவில் இருந்து மற்றுமொரு மாணவக் குழு இலங்கைக்கு

(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் தாக்கத்தை அடுத்து விதிக்கப்பட்டுள்ள பயண தடை காரணமாக இந்தியாவில் சிக்கியுள்ள மேலும் 124 இலங்கை மாணவர்களை இன்று (28) மீண்டும் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் இன்று இந்தியாவின் பெங்களூருக்கு ஸ்ரீலங்கா விமான சேவையின் விசேட விமானம் ஒன்று சென்றுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா மும்பை நகரில் தங்கியிருந்த 163 இலங்கை மாணவர்களும் கோயம்புத்தூரில் சிக்கியிருந்த 113 இலங்கை மாணவர்களும் கடந்த வாரங்களில் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது

Related posts

எல்லை தாண்டும் தமிழக மீனவர்களை கண்டித்து இந்திய சர்வதேச கடல் எல்லையில் இலங்கை மீனவர்கள் கறுப்பு கொடியுடன் முற்றுகை போராட்டம்

ஜனாதிபதியை சந்திக்க மறுத்த – சி.வி.விக்கினேஸ்வரன்

கல்முனை கல்வி வலயம் காஸா மக்களுக்காக 31 இலட்சத்து 28 ஆயிரத்து ஐநூறு ரூபா உதவுத் தொகை கையளிப்பு