உள்நாடு

இந்தியாவில் இருந்து ஒருதொகை அரிசி இலங்கைக்கு

(UTV | கொழும்பு) –  இந்திய கடன் உதவியின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட 40,000 மெட்ரிக் தொன் அரிசியில் ஒரு பகுதி இன்று (11) இலங்கை வந்தடையும் என வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

கிடைத்தவுடன் அதனை சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக அதன் செயலாளர் பத்ராணி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

நாடு மற்றும் கெகுழு அரிசி கிலோ ஒன்று 110 ரூபாவிற்கும் சம்பா கிலோ ஒன்று 130 ரூபாவிற்கும் சதொச ஊடாக விற்பனை செய்யப்படுவதாக வர்த்தக அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

Related posts

அத்தியாவசிய சேவைகளை முறையாக பேணுவதற்கு விஷேட நடவடிக்கை

இந்தியவாழ் இலங்கை அகதிகளுக்கு சர்வதேச அங்கிகாரமிக்க கடவுச்சீட்டு!

பேருவளையில் விருந்துபசாரத்தை நடத்திய 18 பேர் க‍ைது