உலகம்

இந்தியாவின் புதிய ஜனாதிபதியாக திரௌபதி முர்மு இன்று பதவியேற்பு

(UTV |  இந்தியா) – இந்தியாவின் புதிய ஜனாதிபதியாக திரௌபதி முர்மு இன்று பதவியேற்க உள்ளார்.

64 வயதான அவர் இந்திய வரலாற்றில் பழங்குடி சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முதல் ஜனாதிபதியாக கருதப்படுகிறார்.

திரௌபதி முர்மு இன்று இந்தியாவின் ஜனாதிபதியாக பதவியேற்கும் இரண்டாவது பெண்மணியும் ஆனார்.

சமீபத்தில் இந்திய நாடாளுமன்றத்தில் நடைபெற்ற தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவை தோற்கடித்து திரௌபதி முர்மு அப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Related posts

facebook இற்கு 725 மில்லியன் டாலர் அபராதம்

பிரித்தானிய பொதுத் தேர்தலில் இலங்கைத் தமிழர் உமா குமரன் வெற்றி!

நடிகை குஷ்பு கைது