உலகம்

இந்தியாவினால் உலக நாடுகளுக்கு அச்சுறுத்தல்

(UTV |  இந்தியா) – இந்தியாவில் கண்டறியப்பட்ட இரட்டை உருமாற்ற கொரோனா 5 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் குறைந்து வந்த நிலையில் கடந்த சில வாரங்களாக முந்தைய ஆண்டை விட அதிகமான பாதிப்புகள் உயர்ந்து வருகிறது. கொரோனா பாதிப்புகள் காரணமாக மாநில அரசுகள் ஊரடங்கு, தடுப்பூசி வழங்குதலை தீவிரப்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் இந்தியாவில் இரட்டிப்படைந்த உருமாற்ற கொரோனா கடந்த சில வாரங்களுக்கு முன்பு கண்டறியப்பட்டது. மிக வீரியமாக பரவும் இந்த கொரோனாவின் தொற்று தற்போது மேலும் 5 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் உள்ளிட்ட 5 நாடுகளில் இந்த இரட்டிப்பு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

Related posts

பணக்கார நாடுகள் மீது உலக சுகாதார அமைப்பு குற்றச்சாட்டு

இனவெறிக்கு நமது மௌனம் உடந்தையாக இருக்கிறது

சித்தரவதை முகாமாக இருக்கும் குவான்தனாமோ சிறை