விளையாட்டு

இந்தியாவிடம் வீழ்ந்தது ஆப்கான்

(UTV |  துபாய்) – ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில், இந்திய அணி இன்று தனது கடைசி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானுடன் மோதியது. நாணய சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் பீல்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய இந்தியா 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது. கே.எல்.ராகுல் 62 ரன்களில் ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய விராட் கோலி சதமடித்து அசத்தினார். அவர் 61 பந்துகளில் 12 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் 122 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். இதையடுத்து, 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது.

முன்னணி வீரர்களை புவனேஷ்வர் குமார் வெளியேற்றினார். இதனால் சீரான இடைவெளியில் ஆப்கானிஸ்தான் விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 111 ரன்களை மட்டுமே எடுத்தது. இப்ராகிம் சட்ரன் அதிகபட்சமாக 64 ரன்கள் எடுத்தார். இந்தியா சார்பில் புவனேஷ்வர் குமார் 5 விக்கெட் வீழ்த்தினார்.

Related posts

நண்பா உன்னில் பெருமையடைகிறேன் – மஹேல

உலக உதைபந்தாட்டக் கிண்ணம் இன்று மக்கள் பார்வைக்கு

சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார் ஒகுஹரா