கேளிக்கை

இந்தியன் – 2 படப்பிடிப்பில் விபத்து – 3 பேர் பலி

(UTV|இந்தியா ) – ஷங்கரின் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் – 2 திரைப்படத்திற்கான செட் அமைக்கும் பணிகளின்போது பாரந்தூக்கி அறுந்து வீழ்ந்ததில் உதவி இயக்குனர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 9 பேர் காயமடைந்துள்ளனர்.

திரைப்படத்தின் உதவி இயக்குநர், இணை இயக்குநர் மற்றும் உதவி நடன இயக்குநர் ஆகியோரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

இயக்குனர் ‌‌ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்-2 படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லி நசரத்பேட்டையில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் நடந்து வருகிறது. அங்கு விசே‌‌ஷ அரங்குகள் அமைத்து படப்பிடிப்பை நடத்துகின்றனர்.

மிக உயரமான இராட்சத கிரேனில் மின்விளக்குகளை பொருத்தி இந்த காட்சி படம்பிடிக்கப்பட்டது. இதன்போது எதிர்பாராத விதமாக கிரேன் சரிந்து விழுந்ததில் கீழே நின்றுகொண்டிருந்த உதவி இயக்குனர் கிரு‌‌ஷ்ணா, மற்றும் படப்பிடிப்பு ஊழியர்கள் மது(வயது 29), சந்திரன்(60) ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்டுகின்றன.

Related posts

வரலாறு படைத்த ரவுடி பேபி

ரஜினியின் அடுத்த படத்தின் தலைப்பை அறிவித்த தனுஷ்!!

செபரமடு லசித் மாலிங்க பற்றிய சுவாரிசியமான அந்த பத்து விஷயம்