உள்நாடு

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதியை சந்திப்பு

(UTV | கொழும்பு) – இந்திய வெளிவிவகார அமைச்சர் டாக்டர் எஸ்.கே. எஸ் ஜெய்சங்கர் இன்று (28) காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்தார்.

இன்று கொழும்பில் தொடங்கும் ஐந்தாவது பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் ஜெய்சங்கர் இன்று இலங்கை வந்தடைந்தார்.

இந்திய வெளியுறவு அமைச்சரின் வருகையை வரவேற்ற ஜனாதிபதி, உணவு மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு 1 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்கியதற்காக தனது நன்றியை தெரிவித்தார்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 75 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நினைவு நாணயம் மற்றும் நினைவு முத்திரை வெளியீடு உட்பட பல கொண்டாட்டங்கள் இந்த ஆண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தொடர்ந்தும் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை [UPDATE]

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவராக ஜஸ்வர் உமர் நியமனம்

இன்றைய தினம் கொரோனா தொற்றாளர்கள் பதிவாகவில்லை