வகைப்படுத்தப்படாத

இந்திய பிரதமரும் பாகிஸ்தான் பிரதமரும் சந்திப்பு..

(UDHAYAM, COLOMBO) – இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும், பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷெரீப்புக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

கஸகஸ்தானில் இடம்பெறும் ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் பங்கேற்றபோது இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு கஸகஸ்தான் தலைநகர் அஸ்தனாவில் நேற்று ஆரம்பமானது.

இதில் கஸகஸ்தான், ரஷ்யா, கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட 6 நாடுகள்  உறுப்பினர்களாக உள்ளன.

இந்த அமைப்பில் பார்வையாளராக இருந்த இந்தியாவும் பாகிஸ்தானும் உறுப்பினராக இணைய முயற்சிகளை மேற்கொண்டன.

இதையடுத்து இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளையும் உறுப்பினர்களாக இணைத்துக் கொள்ள ஷங்காய் அமைப்பு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

மஹா சிவராத்திரி விரதம் இன்று அனுஷ்டிப்பு

Lanka IOC revises fuel prices

කැබිනට් රැස්වීම පවත්වන වෙලාවේ වෙනසක්