சூடான செய்திகள் 1

இந்திய பிரதமரின் விஜயத்தை முன்னிட்டு கொழும்பை அண்மித்த வீதிகளில் போக்குவரத்து ஒழுங்குகள்

(UTV|COLOMBO) நாளைய மறுதினம் இலங்கை வரவுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்திக்கவுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோக்கலே தெரிவித்துள்ளார்.

இதன்போது, இரு தரப்பு உறவுகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதுடன் இதுதவிர, அவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஷ மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோரை சந்திக்கவுள்ளார்.

மேற்படி , இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு கொழும்பை அண்மித்த வீதிகளில் போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன..

அதற்கமைய நாளை மறுதினம் முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரையான காலப்பகுதியில் இந்த விஷேட போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக பாதை, பேலியொகொடை மேம்பாலம், பொரளை ஊடாக கனத்தை சுற்றுவட்டம் வரையும், பொரளை டி.எஸ் சேனநாயாகக்க சந்தி முதல் காலி வீதி வரையும் இந்த விஷேட போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

அதன்காரணமாக குறித்த காலப்பகுதியினுள் விமான நிலையங்களுக்கு பயணிப்பவர்கள் அது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் என்றும் காவற்துறை ஊடக பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

Related posts

ஆளுங்கட்சியினரின் திடீர் தீர்மானம்

முன்னாள் அமைச்சர் எச்.ஆர். மித்ரபால காலமானார்

வடக்கு-கிழக்கில் மத ரீதியிலான பிரச்சினைகளைக் தீர்ப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை : மகாநாயக்கர்களிடம் எடுத்துரைப்பு