அரசியல்உள்நாடு

இந்திய உயர் ஸ்தானிகர் இலங்கை பிரதமருடன் சந்திப்பு

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்கள், இலங்கை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை நேற்று (13) பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தார்.

இந்த சந்திப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் மூலோபாய கூட்டாண்மையை எடுத்துக்காட்டுவதாக அமைந்திருந்தது.

தற்போது பல்வேறு அபிவிருத்தி நிலைகளில் உள்ள பல இருதரப்பு திட்டங்களின் முன்னேற்றம் குறித்து இந்த கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டது.

இந்த தூதுக்குழுவில் உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்களுடன் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் சிரேஷ்ட அதிகாரிகளும் இடம்பெற்றிருந்தனர்.

இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிக செயலாளர் திருமதி பி.டபிள்யூ.ஜி.சி. சாகரிகா போகஹவத்த, மற்றும் வெளிவிவகார அமைச்சின் தெற்காசியா மற்றும் சார்க் பிரிவு பணிப்பாளர் நாயகம் திரு நிலுக கதுருகமுவ ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

Related posts

இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில்!

முதலாவது தொற்றுக்குள்ளான நபர் பூரண குணம்

இன்று வர்த்தக நிலையங்களில் திடீர் பரிசோதனை