உள்நாடு

இந்த வாரம் எரிபொருள் விலையில் மாற்றம் இல்லை

(UTV | கொழும்பு) – இந்த வாரம் எரிபொருள் விலையில் திருத்தம் இடம்பெறாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

விலை குறைப்பை எதிர்பார்த்து விநியோகஸ்தர்கள் ஆர்டர்களை வழங்காததால் பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் தீர்ந்துபோகும் நிலை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரின் ட்வீட் படி, இலங்கை பெற்றோலியம் பட்டயக் கூட்டுத்தாபனம் (CPC) மற்றும் சிலோன் IOC ஆகியவை தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமான அளவு இருப்புகளைக் கொண்டுள்ளன.

இதன்படி எரிபொருளை ஒழுங்குபடுத்துமாறு விநியோகஸ்தர்களிடம் கோரிக்கை விடுப்பதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நாடளாவிய மதுபானசாலைகளுக்கு பூட்டு

நாடு முழுவதும் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம்!

வெலிக்கடை கைதிகளின் எதிர்ப்பு நடவடிக்கை தொடர்கிறது