உள்நாடு

இந்த ஆண்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையில் பாரிய அதிகரிப்பு

– இந்த வருடத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக சேவையைப் பெற்ற பயணிகளின் எண்ணிக்கை 850,000 ஆக அதிகரிப்பு

– விமான நிலையம் மற்றும் விமானப் போக்குவரத்து சேவைகள் தனியார் நிறுவனத் தலைவர் அதுல கல்கெட்டிய

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையிலான பொருளாதார வேலைத்திட்டம் மற்றும் நாட்டில் உருவாக்கப்பட்ட அமைதியான சூழல் காரணமாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாகவும், அதற்கமைய விமானப் பயணிகளால் அதிகமாக பயன்படுத்தப்படும் இடமாக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மாறியுள்ளதாகவும் விமான நிலையம் மற்றும் விமானப் போக்குவரத்து சேவைகள் தனியார் நிறுவனத் தலைவர் அதுல கல்கெட்டிய தெரிவித்தார்.

அதன்படி 2024 ஜனவரி 1 முதல் மார்ச் 19 வரையில் 850,000 விமானப் பயணிகள் விமான நிலைய சேவைகளைப் பெற்றுக்கொண்டுள்ளதோடு, இந்த வருட இறுதிக்குள் சுமார் 10 மில்லியன் பயணிகள் விமான நிலையத்தை பயன்படுத்துவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

2022ஆம் ஆண்டு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தைப் பயன்படுத்திய மொத்த விமானப் பயணிகளின் எண்ணிக்கை 05 மில்லியனாக இருந்ததாகவும், 2023ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கையை 08 மில்லியனாக அதிகரிக்க முடிந்ததாகவும் கல்கட்டிய சுட்டிக்காட்டினார்.

Related posts

பல புதிய ரயில் சேவைகளை அறிமுகப்படுத்த தீர்மானம்

editor

அம்பாறை மற்றும் மட்டக்களப்பு பகுதிகளில் சிறு வெள்ளப்பெருக்கு தொடர்பில் எச்சரிக்கை

editor

நாளைய கொழும்பு ஆரப்பாட்டத்திற்கு எதிராக நீதிமன்ற உத்தரவு