உள்நாடு

இத்தாலியில் இருந்து மேலும் 116 பேர் நாட்டுக்கு

(UTV | கொழும்பு) – இத்தாலியில் இருந்து மேலும் 116 இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இத்தாலியின் மிலான் நகரில் இருந்து ஸ்ரீ லங்கன் விமான சேவைக்குச் சொந்தமான யூ.எல் 1208 ரக விசேட விமானத்தில் இவர்கள் நேற்றுப் பிற்பகல் 1.25 மணி அளவில் விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

விமான நிலையத்தில் சுகாதார அமைச்சுக்கு சொந்தமான பீ.சீ.ஆர் பரிசோதனை கூடத்தில் இவர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இராணுவத்தினர் இவர்களை தனிமைப்படுத்தலுக்காக அழைத்துச் சென்றனர்.

Related posts

உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டமூலம் தொடர்பில் நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியானது

editor

MT New Diamond : தீ முழுமையாக கட்டுப்பாட்டிற்கு

பல்கலைக்கழக மாணவர்களுக்கு மீண்டுமொரு சந்தர்ப்பம்