விளையாட்டு

இத்தாலி இறுதிப் போட்டிக்குள்

(UTV | இலண்டன்) – இலண்டனின் வெம்ப்லி மைதானத்தில் நடந்த 2020 யூரோ அரையிறுதிப் போட்டியொன்றில் பெனால்டி ஷூட்-அவுட்டில் ஸ்பெய்னை வீழ்த்தி இத்தாலி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.

16 ஆவது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி விறுவிறுப்பான இறுதிக்கட்டத்தை எட்டி விட்டது.

இதில் இங்கிலாந்து தலைநகர் இலண்டனில் இன்று அதிகாலை நடந்த முதலாவது அரையிறுதிப் போட்டியில் உலக தரவரிசையில் 7 ஆவது இடத்தில் உள்ள இத்தாலி, 6 ஆவது இடத்தில் இருக்கும் ஸ்பெயினை எதிர்கொண்டது.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் போடவில்லை.

ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 60 ஆவது நிமிடத்தில் இத்தாலி அணியின் பெட்ரிகோ சிய்சா முதல் கோலடித்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஸ்பெயின் வீரர் அல்வாரோ மொராட்டா 80 ஆவது நிமிடத்தில் பதில் கோல் அடித்தார்.

இறுதியில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகித்தன.

கூடுதல் நேரம் வழங்கியும் இரு அணிகளின் கோல் போடும் முயற்சிகள் பலனளிக்கவில்லை.

இதையடுத்து, வெற்றியாளரை நிர்ணயிக்க பெனால்டி ஷூட் அவுட் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் 4-2 என்ற கோல் கணக்கில் இத்தாலி அபார வெற்றி பெற்றது.

இதன்மூலம் 2020 யூரோ கால்பந்து போட்டியின் இறுதிப்போட்டிக்கு இத்தாலி அணி முன்னேறியது.

இலண்டனில் ஜூலை 7 புதன்கிழமை நடக்கும் 2 ஆவது அரையிறுதியில் இங்கிலாந்து -டென்மார்க் அணிகள் மோதும்.

Related posts

இலங்கை அணிக்காக களத்தில் போராடும் சந்திமல்!!

CSK அதிரடி வெற்றி பற்றி சில பிரபலங்களின் ட்விட்டர் கருத்துக்கள்

இலங்கை – மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான இருபதுக்கு 20 தொடர் இன்று