உள்நாடு

இதுவரை ஊரடங்கு உத்தரவை மீறிய 47 ஆயிரத்து 866 பேர் கைது

(UTV | கொழும்பு) –  கடந்த மார்ச் 20 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறிய 47ஆயிரத்து 866 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு 12 ஆயிரத்து 448 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலயத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய 600 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த காலப்பகுதியில் 209 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

MV Xpress pearls : இன்றும் கலந்துரையாடல்

இன்று முதல் 3 மணி நேரம் மின்வெட்டு

எதிர்கட்சிக்கு காஞ்சனாவிடம் இருந்து அழைப்பு