சூடான செய்திகள் 1

இதுவரை 2289 பேர் கைது

(UTV|COLOMBO) கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற தினத்திலிருந்து இன்று வரை 2,289 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில் குறித்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்பிருப்பதாக சந்தேகத்தில் நாட்டின் வெவ்வேறு பிரதேசங்களில் பலர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு 2,289 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் 1.665 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் 423 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் 211 பேர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்படுவதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

 

 

Related posts

அப்பத்தின் விலை அதிகரிப்பு…

மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகரவுக்கு பிணை

பயங்கரவாத சந்தேக நபர்கள் இருவரையும் தடுத்து வைத்து விசாரணை செய்ய நடவடிக்கை