கிசு கிசு

இணையத்தில் பிரபலமான பூனை உடல்நலக்குறைவால் உயிரிழந்தது

(UTV|AMERICA) சிடுசிடுவென்ற முகத்துடன் கடந்த 2012 ஆம் ஆண்டு இணையத்தில் பிரபலமான கிரம்பி எனும் பூனை உடல்நலக்குறைவால் உயிரிழந்தது.

இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நட்சித்திரமாக விளங்கிய கிரம்பி என்ற 7 வயது பூனை இறந்ததாக அதன் பராமரிப்பாளர்கள் இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். பலரும் அதற்கு இரங்கல் தெரிவித்தனர். வளர்ச்சிக் குறைப்பாட்டின் காரணமாகப் கிரம்பி பூனையின் முகம் எப்போதும் கோபமாக இருப்பது போலவே இருக்கும். இதன் முகத்தை வைத்து உருவாக்கப்பட்ட ஏராளமான மீம்ஸ்கள் உலக அளவில் வைரலானது. அனைவருக்கும் பூனை இன்பம் தந்ததாக அதன் உரிமையளர் சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டார். பேஸ்புக்கில் பூனைக்குச் சுமார் 8.5 மில்லியன் ரசிகர்கள் இருக்கின்றனர். இன்ஸ்டாகிராமில் 2.5 மில்லியன் ரசிகர்களும் ட்விட்டரில் 1.5 மில்லியன் ரசிகர்களையும் கொண்டிருந்தது.

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள பீனிக்ஸ் நகரில் குடியிருந்து வந்த இந்த கிரம்பி பூனை ஒரு முழு நீள திரைப்படத்திலும் நடித்து புகழின் உச்சிக்கு சென்றது. 4 வயதாக இருக்கும்போது கிரம்பி பூனையின் சொத்துமதிப்பு 64 மில்லியன் பவுண்டுகள் ஆகும்.

 

 

 

Related posts

தனி மரம் தோப்பாகாது : வாசுதேவ இன்று தீர்மானம்

மதிய உணவு வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் ரஞ்ஜன்:ஏழு சிறு பௌத்த பிக்குகளுக்கு எயிட்ஸ்