உள்நாடு

இணையத்தின் ஊடாக பண மோசடி : 14 பேர் கைது

(UTV | கொழும்பு) – இணையத்தின் ஊடாக பண மோசடி செய்த வௌிநாட்டவர்கள் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வௌிநாடுகளில் குலுக்கள் போட்டிகளின் ஊடாக பெறுமதி வாய்ந்த பரிசுகளை வென்றுள்ளதாக தெரிவித்து இணையத்தின் ஊடாக 6 கோடி ரூபாவிற்கு அதிகமான பண மோசடி செய்யப்பட்டுள்ளதாக 101 முறைப்பாடுகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இந்த சம்பவம் தொடர்பில் நைஜீரியா, சீனா மற்றும் பிலிபைன்ஸ் நாட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Related posts

“பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு குறைந்த விலையில் எரிபொருளை வழங்க எவ்வித தீர்மானமும் இல்லை”

சந்தேக நபர்கள் 07 பேர் கைது

வெளிநாட்டு தபால், பொருட்கள் சேவைகளை மீள ஆரம்பிக்க தீர்மானம்