சூடான செய்திகள் 1

இணையத்தளமூடாக பரீட்சை பெறுபேற்று சான்றிதழை வழங்க நடவடிக்கை

(UTV|COLOMBO)  பரீட்சை பெறுபேற்று சான்றிதழை இணையத்தளத்தின் ஊடாக வழங்குவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மேற்படி பரீட்சைத் திணைக்களத்திற்கு வருகைதராமல் பரீட்சை பெறுபேற்று சான்றிதழ் பிரதியை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் குறித்த சான்றிதழை விரைவுத் தபால் ஊடாக அனுப்பிவைக்கப்படும் என, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

மேலும் இதற்கான மாணவர்கள் தமது கடனட்டை அல்லது டெபிட் அட்டைகளைப் பயன்படுத்த முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அல்லது அருகிலுள்ள தபால் நிலையத்தில் அதற்கான கட்டணத்தை செலுத்தி, பற்றுச்சீட்டு இலக்கத்துடன், இணையத்தளத்தின் ஊடாக பரீட்சை பெறுபேற்று சான்றிதழுக்கு விண்ணப்பிக்க முடியும்.

 

Related posts

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 2084 ஆக உயர்வு

நாளை முதல் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி நிலை

என்.கே. இளங்ககோன் இன்று தெரிவுக்குழுவில் ஆஜராக தேவையில்லை