வகைப்படுத்தப்படாத

இணையத்தளத்தினூடாக ஏற்றுமதி இறக்குமதிக்கான அனுமதிப்பத்திரம்

(UTV|COLOMBO)-தேசிய உள்ளுர் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்கான ஆவணங்களில் முக்கிய இடம் பெறும் ஏற்றுமதி இறக்குமதிக்கான அனுமதிப்பத்திரத்தை இணையத்தளத்தினுடாக பெற்றுகொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

அபிவிருத்தி மூலோபாய மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சும் இலங்கை தகவல்தொழில்நுட்ப தொடர்பாடல் முகவர் நிலையமும் இணைந்து இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.

 

இதற்கமைவாக www.imexport.gov.lk என்ற இணையத்தளங்களில் இது தொடர்பான தகவல்களை பெற்றுகொள்ளமுடியும். இதற்கமைவாக ஏற்றுமதி இறக்குமதிக்கான அனுமதிப்பத்திரத்தை பெற்றுகொள்வதற்கான விண்ணப்பத்தை இந்த இணையத்தளத்தில் பிரவேசித்து அதனை பெற்று பூரணப்படுத்திய பின்னர் அதனுடாக ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கட்டுப்பாட்டு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கும் வசதிகளும் இதில் செய்யப்பட்டுள்ளன.

 

ஏற்றுமதி மற்றும் இறக்குமதி அனுமதிப்பத்திரத்தை விநியோகிப்பதற்காக 23 நிறுவனங்கள் குறித்த தேவையான தகவல் சிபாரிசு மற்றும் அங்கீகரிப்பதற்கான விண்ணப்பமும் இந்த கட்டமைப்பின் மூலம் நேரடியாக சமர்ப்பிக்ககூடிய வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

 

இதன் கீழ் அனுமதிப்பத்திரத்திற்கு விண்ணப்பிப்போருக்கு செயற்திறனுடனான சேவையை பெற்றுக் கொடுக்கப்படும் என்று இலங்கை தகவல்தொழிநுட்ப தொடர்பாடல் முகவர் நிலையம் தெரிவித்துள்ளது.

 

புதிதாக வடிவமைக்கப்பட்ட ஏற்றமதி மற்றும் இறக்குமதி திணைக்களத்தின் ஆரம்ப நிகழ்வு சமீபத்தி;ல் ஏற்றமதி மற்றும் இறக்குமதி திணைக்களத்தில் இடம் பெற்றது.

 

இந்த நிகழ்வில் அமைச்சர் மலிக் சமர விக்கிரம , இராஜாங்க அமைச்சர் சுஜிவ சேனசிங்க ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

புயலுடன் கூடிய மழையால் 27 பேர் உயிரிழப்பு…

‘போயிங் 737’ ரக விமானங்களுக்கு அமெரிக்காவில் தடையா?

Plane crash at Texas Airport kills 10