உள்நாடு

இடைநிறுத்தப்பட்ட கடவுச்சீட்டு வழங்கும் வழமையான சேவை இன்று முதல் வழமைக்கு

(UTV | கொழும்பு) –   கணனி அமைப்பில் ஏற்பட்டுள்ள அவசர திருத்தப்பணிகள் காரணமாக இடைநிறுத்தப்பட்ட கடவுச்சீட்டு வழங்கும் (ஒரு நாள் சேவை தவிர்ந்த) வழமையான சேவையை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த சேவைகள் நாளை(09) முதல் ஆரம்பிக்கப்படும் என திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிப்பதற்கு மே 5, 6 மற்றும் 9 ஆம் திகதிகளில் முன் நியமனம் செய்த நபர்களுக்கும், மே 5 ஆம் திகதி கடவுச்சீட்டுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்து இலக்கம் பெற்ற நபர்களுக்கும் மட்டுமே நாளை (9) விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.

இதன்படி, கடவுச்சீட்டு விண்ணப்பங்களை கையளிப்பதற்கு முன் சந்திப்புகளை மேற்கொள்வது செவ்வாய்க்கிழமை (10) முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குச் சென்று அல்லது 0707 101 060 என்ற இலக்கத்தைத் தொடர்புகொள்வதன் மூலம் இது குறித்த திகதிகள் மற்றும் நேரங்களை முன்பதிவு செய்யலாம்.

Related posts

இன்றும் 289 பேர் தாயகத்திற்கு

இன்று நாடளாவிய ரீதியில் பல ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுப்பு!

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரை பெப்ரவரி 17 ஆம் திகதி

editor