சூடான செய்திகள் 1

இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்

(UTV|COLOMBO) – மேல், சபரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணத்திலும் காலி, மாத்தறை, அநுராதபுரம், வவுனியா மாவட்டங்களிலும் இன்றிரவு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டத்திலும் 100 மில்லிமீற்றர் அளவில் மழைவீழ்ச்சி பதிவாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளையில் காற்றின் வேகமானது மணிக்கு 70 தொடக்கம் 80 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

அனர்த்தம் தொடர்பாக அறிவிப்பதற்கு தொலைபேசி இலக்கங்கள்

கோட்டாபயவிற்கு வெளிநாடு செல்ல வழங்கப்பட்ட அனுமதிக் காலம் நீடிப்பு

பொய்சாட்சியம் வழங்கியமை தொடர்பில் ரவிக்கு எதிராக வழக்கு