உள்நாடு

இசுருபாய பிரதான வாயில் உடைப்பு : விசாரணைகள் ஆரம்பம்

(UTV | கொழும்பு) –  பத்தரமுல்லை – இசுருபாய கல்வி அமைச்சுக்கு முன்பாக நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் நாரஹேன்பிட்டி பொலிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலில் பொலிஸ் உத்தியோகத்தர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், இசுறுபாய கல்வி அமைச்சின் பிரதான வாயில் உடைக்கப்பட்டமை தொடர்பில் தலங்கம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அவர் இன்று கடுவெல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

Related posts

‘புதிய கொவிட் அலையின் அறிகுறிகள் புலனாகிறது’

நாட்டின் பல இடங்களில் இன்றும் மழை

மொரட்டுவ உணவக தாக்குதல் தொடர்பில் ஒருவர் கைது