விளையாட்டு

இங்கிலாந்து வீரர்கள் சென்னைக்கு

(UTV | இந்தியா) – இந்தியா – இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர் போட்டியில் கலந்து கொள்ள இங்கிலாந்து வீரர்கள் இன்று சென்னை வந்தடைந்தனர்.

இந்தியா – இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர் போட்டி எதிர்வரும் பெப்ரவரி 5ம் திகதி முதல் இந்தியாவில் நடைபெற உள்ளது. இதில் முதல் டெஸ்ட் ஆட்டம் 5ம் திகதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இதற்காக இங்கிலாந்திலிருந்து முன்கூட்டியே வரும் கிரிக்கெட் வீரர்கள் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்டு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட உள்ளனர். அதன்படி இங்கிலாந்து வீரர்கள் இன்று சென்னை வந்தடைந்தனர். சென்னை விமான நிலையம் வந்த அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

அதன்பிறகு ஓட்டலில் தனிமைப்படுத்தப்படுவார்கள். தனிமைப்படுத்திய காலம் முடிவடைந்த பின்னர் ஒன்றாக இணைந்து பயிற்சி மேற்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பர்வீஸ் மஹரூபிற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் பதவி

தொடரை கைப்பற்றியது இந்தியா அணி

இலங்கை அணி வீரர்களுக்கு டெங்கு