உலகம்

இங்கிலாந்தில் கடும் பனிப்பொழிவு – பல விமான நிலையங்கள் மூடப்பட்டது

கடும் பனிப்பொழிவு காரணமாக இங்கிலாந்தில் பல விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

மான்செஸ்டர், லிவர்பூல் மற்றும் பர்மிங்காம் விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்ட விமான நிலையங்களில் அடங்கும்.

இந்நாட்களில் நாட்டின் பல மாகாணங்களில் கடும் பனிப்பொழிவு தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், நாடு முழுவதும் பல இடங்களில் வெப்பநிலை மைனஸ் 11 பாகை செல்சியஸ் அளவில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், இங்கிலாந்தில் உள்ள இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் ஸ்காட்லாந்துக்கு அம்பர் எச்சரிக்கைகள் விடப்பட்டுள்ளன, போக்குவரத்து கட்டுப்பாடுகள் மற்றும் மின் தடைகள் நடைமுறையில் உள்ளன.

Related posts

வீதியை விட்டு விலகி நீர்த்தேக்கத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளான பேரூந்து

பேருந்து விபத்தில் 27 பேர் பலி – 20 பேர் காயம்

ரைஸியின் அஞ்சலி நிகழ்வு: UNயின் அழைப்பை புறக்கணித்த அமெரிக்கா!